• SBS Examines: In Conversation with the Governor-General - SBS Examines: கவர்னர் ஜெனரலுடன் ஒரு உரையாடல்
    Nov 8 2024
    Australia's Governor-General is hopeful about Australia's future, despite conflict and difficulty dominating headlines. - மோதல்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல்.
    Show more Show less
    8 mins
  • ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சி!
    Nov 8 2024
    ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சற்று குறைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    3 mins
  • US Presidential election: It’s the economy not women’s right that decided - அமெரிக்க அதிபர் தெரிவு: பெண்ணியம் அல்ல, பொருளாதாரம்
    Nov 8 2024
    Political observer and long-term resident of California Mithiran Karunananthan analyses the US elections with Kulasegaram Sanchayan. - அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவரும், அமெரிக்க அரசியலைக் கூர்ந்து அவதானித்து வருபவருமான மித்திரன் கருணாநந்தன் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    18 mins
  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
    Nov 8 2024
    நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கையில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது; எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் மீனவர்கள் போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
    Show more Show less
    9 mins
  • நாஸி பாணியில் வணக்கம் செலுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதித்த விக்டோரிய நீதிமன்றம்
    Nov 8 2024
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    5 mins
  • “மனைவி, இரு குழந்தைகளை விட்டுவிட்டு புத்த பிக்குவானேன்”
    Nov 7 2024
    தமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் முதற்பாகம்.
    Show more Show less
    14 mins
  • தமிழின் மாபெரும் ஆளுமை: தமிழண்ணல்
    Nov 7 2024
    இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி மற்றும் திரு.வி.க. விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அவர் நம்மைவிட்டு மறைந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்தாலும், அவர் 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட வேளையில் நம்முடன் அவர் உரையாடியது காலத்தால் அழிக்க இயலாத பதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
    Show more Show less
    8 mins
  • ஒன்பது லட்சம் பேரின் பணம் அரசிடம் உள்ளது; எப்படி உரிமை கோருவது?
    Nov 7 2024
    ஆஸ்திரேலியாவில் Medicare கார்டு வைத்திருக்கும் பல லட்சம் மக்களில் சுமார் 930,000 பேருக்கு சொந்தமான ஆனால் அவர்கள் உரிமை கோராத 241 மில்லியன் டாலர் பணம் தம்மிடம் இருப்பதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. இதை எப்படி பெறுவது என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Claire Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
    Show more Show less
    8 mins